பெங்களூரு

காஃபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மறைவை ஒட்டி இன்று அந்நிறுவன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

.

பிரபல காஃபி விற்பனை நிறுவனமான கஃபே காஃபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மங்களூருவில் நேற்று முன் தினம் திடீரென காணாமல் போனார். அவரை காவல்துறையினர் 36 மணி நேரத் தேடலுக்குப் பிறகு நேத்ராவதி நதியில் சடலமாகக் கண்டெடுத்தனர். இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது

மறைந்த சித்தார்த்தா பாஜக மூத்த தலைவர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். கிருஷ்ணா க்ட்னத 1999 முதல் 2004 வரை கர்நாடக மாநில முதல்வராகவும் மத்திய அரசில் 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மறைந்த சித்தார்த்தாவுக்கு மாளவிகா என்னும் மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

காஃபி டே நிறுவனத்துக்கு நாடெங்கும் உள்ள 240 நகரங்களில் 1750 விற்பனை நிலையங்கள் உள்ளன. சித்தார்த்தாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவை அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி இந்த நிறுவனங்களின் துணை நிறுவன அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.