புதுடெல்லி: பெரும் கடனில் சிக்கித் தவித்த காஃபி டே நிறுவனத்தின் கடன்கள், அதன் நிறுவனர் சித்தார்த்தாவின் முயற்சியால் பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக உலகின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் முந்தைய தற்கொலை கடிதம் கார்ப்பரேட் உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
காஃபி டே நிறுவனத்திற்கு மார்ச் 2019 வரையான காலகட்டம் வரை ரூ.6550 கோடி கடன் இருந்ததாக கூறப்பட்டது. சில ஏற்றுமதி தொழில்களையும் கொண்டுள்ள இந்தக் குழுவின் வணிக மதிப்பு 2018 நிதியாண்டில் ரூ.1777 கோடியாகவும், 2019 நிதியாண்டில் ரூ.1814 கோடியாகவும் இருந்ததாய் கூறப்படுகிறது.
ஆனால், பல்வேறு நெருக்கடிகளால் இவரின் தொழில்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. சர்வதேச சந்தையின் போக்கால், இந்தியாவிலும் குறைக்கப்பட்ட காஃபி விலையால் பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. இந்தியாவில் காஃபி உற்பத்தி குறைவாக இருந்தாலும், சூழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, நிறுவனம் கடனில் மூழ்கியது. இதனையடுத்து தனது நிறுவனப் பங்குகள் மற்றும் சொத்துக்களை விற்பதன் மூலமாக நிறுவனக் கடனை சித்தார்த்தா பெருமளவில் குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.