உலகின் முன்னணி ரம் தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி உடன் கோகோ கோலா நிறுவனம் கைகோர்த்துள்ளது.
ரம் மற்றும் கோக் இரண்டையும் கலந்த காக்-டெயில் பானத்தை கேன்களில் அடைத்து விரைவில் விற்பனை செய்ய உள்ளது.
ஏற்கனவே உலகின் முன்னணி பீர் உற்பத்தி நிறுவனமான மோல்சன் கூர்ஸ் உடன் இணைந்து 2021ம் ஆண்டு முதல் காக்-டெயில் விற்பனையில் கோகோ கோலா நிறுவனம் இறங்கியது.
தவிர, ஜாக் டேனியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்கியுடன் கூடிய ரெடி டு ட்ரிங்க் (Coca-Cola RTD) மதுவகையையும் கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டு அமெரிக்காவில் ப்ரீமிக்ஸ்டு காக்டெய்ல் வகைகளின் விற்பனை 26.7% அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் டிஸ்டில்டு ஸ்பிரிட்ஸ் கவுன்சிலின் வருடாந்திர பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையடுத்து வளர்ந்து வரும் மதுபான சந்தையில் ஸ்பிரிட் வகை பானங்களையும் அதிகரித்து மொத்த பான நிறுவனமாக தங்களை நிலை நிறுத்த கோகோ கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
BACARDÍ உடனான Coca-Cola RTD 2025ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெக்சிகோ சந்தைகளில் சேர்க்கப்படும் என்றும் இதனைத் தொடர்ந்து உலக சந்தைகளில் அதன் விற்பனை துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்தந்த நாடுகளில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு மதுபானங்களை குடிப்பதற்கு உண்டான வயதை உடையவர்களுக்கு மட்டுமே விற்கப்பட இருக்கும் இந்த வகை ப்ரீமிக்ஸ்டு காக்டெய்ல் மதுபான அளவு (ABV)க்கான உலகளாவிய அளவுகோலான 5%த்தை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.