அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது.

டீஸர் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருகிறார் விக்ரம். கணித வாத்தியராக இருந்து கொண்டு அவர் செய்யும் குற்றங்களை கண்டு பிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக இருக்கிறார் இர்ஃபான் பதான். ஒளிப்பதிவு, பின்னணி இசை என பட்டையை கிளப்புகிறது கோப்ரா டீஸர். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான்.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. மாஸ்கோவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

கொரோனா காரணத்தால் இந்த படத்துக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பட்ஜெட் ஏற்கனவே அதிகரித்துள்ளது. 95% காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் கோப்ரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]