பாகல்பூர்

பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Terrorist activity, terrorist, assassination group actor, assassination operation,

தண்ணீர்  குழாய் தொடர்பாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித் யாதவ் மற்றும் விகல் யாதவ் ஆகிய இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளபோது திடீரென இருவரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விகல் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜகஜித் யாதவ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தவர் மத்திய மந்திரி நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.