மும்பை:
பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது மக்கள் காலை ஏழு மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணி முதல் நான்கு மணி வரை நிறுத்தப்படுவதுடன், இரவு 9 மணிக்கு அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் சேவைகள், மக்கள் நெருக்கடி இல்லாத நேரங்களில் இயக்கப்படுவதை போன்றே, அதே கால அட்டவணையில் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.