சென்னை 

ன்று முதல்வர் மு க ஸ்டாலினின் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் இரண்டாம் பகுதி ஆடியோ வெ:ளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார்.  ஏற்கனவே அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், தற்போது 2-வது உரை வெளியாகி உள்ளது.

இன்று வெளியாகி உள்ள ஆடியோ உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“கடந்த 2014, 2019 தேர்தலில் ஏமாந்தது போல் 2024 தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. இந்த 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்.

பாஜக அரசு வகுப்புவாதம், ஊழல், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்டதாக உள்ளது”

மோடி தமக்கு 60 மாதங்கள் கொத்தால் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று கூறினார். இந்திய மக்கள் அவருக்கு 60 மாதங்கள் மட்டுமில்லை. கூடுதலாக இன்னொரு 60 மாதங்களையும் வழங்கினார்கள். இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்ற கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும்.”

என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளார்.