சென்னை:
பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும்.
இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஏதுவாக கேரள வனத்துறையினர் 15 மரங்களை வெட்ட அனுமதியளித்துள்ளதாக நீர்வளத் துறையினர் மூலமாகத் தெரிய வந்தது.
இந்த அனுமதியை வழங்கிய கேரள அரசுக்கும், கேரள முதல்வருக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel