சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தென்மாவட்ட முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் கலந்துகொள்ளும்,  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேற்குவங்கம் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில்  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப் மாநில முதல்வர்களும், கர்நாடக துணைமுதல்வரும் கலந்துகொள்ள உள்ள நிலையில், பாஜக கருப்புகொடி போராட்டமும் அறிவித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,.

மக்கள் தொகை அடிப்படையில், 2026ம் அண்டு நாடு முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட உள்ளது. இதனால், மக்கள் தொகை குறைவாக உள்ள தென்மாநிலங்கள், தங்களுடைய தொகுதிகளை இழக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்காக தமிழக அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் அண்டைய மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதன்படி,  இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி ஏழு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் சென்னை வந்துள்ளனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நாளை காலை சென்னை வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மேற்குவங்க முதல்வர் பங்கேற்கவில்லை. இதனிடையே, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று கூட்டம் நடைபெறுவதையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாஜக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளதால், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்றபதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.