சென்னை
தென் மாவட்டங்களில் கன மழை காரணமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என முதல்வர் கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் இரவு முதல் தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் நிவாரணத்துக்காகத் தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்
“திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”
என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]