திருச்சி

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருச்சி செல்கிறார்.

 

தமிழக முதல்வர் மு க ஸாலின் இன்று திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு நாள் பயணமாக திருச்சி செல்கிறார்.

சென்னையில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி செல்கிறார்.

அவர் அங்கு, பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.