சென்னை
தமிழக அளுநர் உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு சென்றதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்;
இன்று தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறயும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்
இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே போயிருப்பதர்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,
”அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த கவர்னர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. “தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!”
என்று தெரிவித்துள்ளார்.