சென்னை
சபாநாயகரிடம் வேல்முருகன் எம் எல் ஏ குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றபோது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கூறியதற்கு அமைச்சர் மெய்யநாதன் தரப்பில், அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று எந்த சுப்ரீம்கோர்ட்டும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். தவிர இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை முன்வைத்ததுடன் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசினார்.
பிறகு சபாநாயகர் இருக்கை முன்பு சென்று பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டதோடு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்குமாறு கூறிய போதும், அவர் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார்.
எனவே கோபமடைந்த முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,
“தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் அப்பாவு,
“வேல்முருகன் இருக்கையை விட்டு வெளியே வந்து ஒருமையில் பேசியது நாகரீகமான செயல் அல்ல. இது ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுபோல் இனி நடந்து கொள்ள கூடாது. இந்த ஒருமுறை மன்னிக்கிறோம். இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
என்று தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் எம் எல் ஏ, சபாநாயகர், முதல்வர் புகார்,