ஐதராபாத்:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் கொடுமையில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநில அரசு கூல் ஜாக்கெட் வழங்கி உள்ளது.
இதை பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள் அணிவதால், வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அதிகரித்து வெயில் காரணமாக சாலை போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினர் விரைவில் சோர்வடைந்து போகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினரை வெயில் கொடுமையில் இருந்து தவிர்க்கும் பொருட்டு, தெலுங்கான மாநில அரசு, காவலர்களுக்கு கூல் ஜாக்கெட் வழங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி , தற்போது முதல் கட்டமாக ஐதராபாத் நகர போலீசாருக்கு கூல் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பருத்தியில் தயாரான நீல வண்ண கூல் ஜாக்கெட் வெயிலில் தாக்கத்திலிருந்து போலீசாரை பாதுகாக்கும் என்பதால், வெப்பத்தால் சோர்வடையாமல் பணியாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.