சென்னை
குடியுரிமை அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றி வருகின்றனர்.

அண்மையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. மேலும் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்கத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் யாரேனும் மறுத்தால் போலீஸ் உதவியுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடியுமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் இதுவரை தமிழகத்தில் எத்தனை பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை குடியுரிமை அதிகாரிகள் வெளியிடவில்லை.
[youtube-feed feed=1]