வாஷிங்டன்
அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தலைமை அதிகாரி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன.
அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனம் சிஐஏ. இதன் தலைவர் பொருப்பில் உள்ளவர் மைக் பாப்பியோ. தற்போது அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையே சமாதான பேச்சு வார்தைகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மைக் பாப்பியோ வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ரகசிய சந்திப்பு நிகழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் உடன் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுமின்றன.
அமெரிக்க அரசு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்திய போதிலும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. நடந்து முடிந்த ஈஸ்ட்ர் தினத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அமெரிக்க ஊடகங்களிலும் செய்தி வெலியாகி உள்ளது.