புதுடெல்லி:
சவுக்கிதார் (காவலாளி) திருடன் என்று பிரதமர் நரேந்திர மோடியை கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில்
வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை சவுக்கிதார் திருடன் என்று ராகுல்காந்தி விமர்சித்தார்.
இதனையடுத்து ராகுல் காந்தி மீது உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
ரபேல் விவகாரத்தில் வெளியான ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியை தேர்தல் பிரச்சார பேரணியில், சவுக்கிதார் திருடன் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் திருடினாரா என்பதை நீதிமன்றம் தான் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடியை சவுக்கிதார் திருடன் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அனல் பறக்கும் பிரச்சாரத்தின் போது அவ்வாறு பேசிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.