தேவையான பொருட்கள்;
பால் – 1 லிட்டர்
ஃப்ரெஷ் கிரீம் – 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் – 1/2 டீஸ்பூன்,
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்,
ஜி.எம்.எஸ் – 1 ஸ்பூன்
ஜெலட்டின் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். மீதி பாலில் சர்க்கரை கலந்து திரும்பவும் காய்ச்சி ஆற வைக்க வேண்டும். தனியாக ஆறவைத்த பாலை பாதியாக பிரித்து கால் கப் எடுத்து, அதில் ஜி.எம்-எஸ்ஸை கலக்கவும். இன்னொரு கால் கப் பாலில் கோகோ பவுடரை கலக்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை சேர்க்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு கரைய விடவேண்டும். இப்போது, சர்க்கரை கலந்து காய்ச்சி ஆறவைத்துள்ள பாலை எடுத்து, அதில் இந்த இரண்டையும் சேர்க்க வேண்டும்.
கடைசியில் இதனுடன் ஃப்ரெஷ் கிரீமை சேர்க்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் எல்லா பால் கலவைகளையும் ஒன்றாக கலந்து ஹேண்ட் மிக்ஸரால் நன்றாக அடிக்கவும். இப்போது ஒரு கப்’ அல்லது டப்பர்வேரில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சாக்லெட் ஐஸ்கிரீம் ரெடி.!