இனிப்பான செய்தி!! மாரடைப்புக்கு மருந்து ‘‘சாக்லெட்’’

சாக்லெட் சாப்பிடக் கூடாது என்று யாராவது அறிவுரை கூறினால் கண்டிப்பாக அதை எதிர்க்கலாம்.

‘‘நான் என் இதயத்துக்காக சாப்பிடுகிறேன்’’ என்று தைரியமாக கூறலாம். ஆம் தொடர்ந்து சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன் மருத்துவ ஆய்வு முடிவில், ‘‘ சாக்லெட் சாப்பிட்டால் இதயம் சார்ந்த நோய்களிலிருந்து தப்பி முடியும். இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் தினசரி உணவுடன் சாக்லெட் எடுத்துக் கொண்டனர். அவர்களது உடல் நலம் குறித்த ஆரோக்கியமும் தினமும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதில் சாக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக் கொண்டவர்களின் ரத்த ஓட்டம் சீராகவும், மேலும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியிலும் சாக்லெட் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களுக்கு சாக்லெட் மருந்தாக மாறியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேலும் நடத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


English Summary
choclate intake regularly may avoid heart disease researchers told