ஞ்சாவூர்

ஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றதாகும் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை வெளிநாட்டினரும் கண்டு அதிசயித்து வருகின்றனர்.   தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வருகை தருவது முன்பு வழக்கமாக இருந்தது.

இந்த கோவிலின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதால் மிக குறைந்த அளவில் பக்தர்கள் பங்கேற்றனர்.  இந்த சித்திரைத் திருவிழா 18 நாட்கள் நடைபெற உள்ளன.

இந்த 18 நாட்களிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கக் கோவிலின் உள்ளேயே சாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் மிகவும் எளிமையாக நடைபெற உள்ளன.  அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.