தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, “ஆச்சார்யா” படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டே இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள் ஷுட்டிங் நடக்கவில்லை.

கொரட்டல சிவா இயக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பு இப்போது, முடியும் தருவாயில் உள்ளது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், கதாநாயகியாக நடிக்கிறார்.

இதனை அடுத்து சிரஞ்சீவி மலையாளத்தில் வெற்றி பெற்ற “லூசிபர்” படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கிறார்.

நம்ம ஊர் மோகன் ராஜா, டைரக்டு செய்யும் இந்த படத்தின் பூஜை கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.

6 மாதங்களில் இதன் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க, சிரஞ்சீவியும், மோகன்ராஜாவும் திட்டமிட்டுள்ளனர்.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்த “ஹிட்லர்” தெலுங்கு படத்தில், மோகன்ராஜா உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.

– பா. பாரதி