ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் ராம் சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.