பீஜிங்:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சீன மார்க்கெட்டுகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, அங்கு நாய், பாம்பு,பல்லி போன்ற உணவுப்பொருட்கள் விற்பனை களைகட்டி வருகின்றன.
தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கெட்டில் இருந்துதான் முதன்முதலாக பரவியது. சீனாவின் வுகான் மற்றும் ஹுபே மாநிலங்களை புரட்டிப்போட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.
இதன் காரணமாக அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இருமாநில எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்களை சீன அரசு தீவிரமாக மேற்கொண்டது. இதன் காரணமாக கொரோனா அங்கிருந்து விலகி, இப்போது உலக நாடுகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில், சீனச் சந்தைகள் வழக்கம் போல் மீண்டும் வணிகத்தைத் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான ‘வெற்றியை’ கொண்டாடும் வகையில், மீண்டும் பாம்பு, நாய் போன்ற விலங்கினங்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீன அரசும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சாதாரண அன்றாட வாழ்க்கைக்குச் மக்களை ஊக்குவித்ததால் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் எடுக்க அதிகாரிகள், பாதுகாப்புக் காவலர்கள் யாரையும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவதில்லை என்றும், இதுபோன்ற ஒரு நிகழ்வு இது இதற்கு முன்பு நடந்ததில்லை என்று ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய பிரபல நாளிதழின் செய்தியாளர் ஒருவர், சீனர்கள் தங்கள் வழக்கமான பழக்கத்தை விட விரும்பவில்லை என்றும், தென்மேற்கு சீனாவின் நகரமான குயிலினில் உள்ள சந்தையில், வவ்வால்கள், பாம்புகள், சிலந்திகள், பல்லிகள் மற்றும் தேள் ஆகியவை விற்பனை செய்வதாகவும், .இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். ஆனால், அதை புகைப்படம் எடுப்பதை அதிகாரிகள் தடுத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், அங்கு புதிய நாய் மற்றும் பூனை இறைச்சிகளுக்கு சலுகை வழங்கப்பட்டது என்றும், அங்குள்ள சந்தைகளில் பயந்துபோன நாய்களும் பூனைகளும் துருப்பிடித்த கூண்டுகளில் உள்ளன. பாரம்பரிய மருந்தாக விற்பனைக்கு வழங்கப்படும் வவ்வால்கள் மற்றும் தேள் மற்றும் முயல்கள் வாத்துகள் காணப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.