ஐதராபாத்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களைச் சீன ஹேக்கர்கல் குறி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மும்பை நகரில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதார நகரம் என அழைக்கப்படும் மும்பை நகர் கடும் இருளில் மூழ்கியது. நகரம் முழுவதும் முடங்கியது. நீண்ட நேரம் நீடித்த இந்த மின் தடையைச் சரி செய்ய சீரமைப்பு பணிகள் பல மணி ந்ந்ரம் நடந்தது.
இந்த மின் தடைக்குக் காரணம் சீன ஹேக்கர்களில் சைபர் அட்டாக் என செய்தி வெளியானது. சீன அரசின் ஆதரவு பெற்ற சைபர் அட்டாக் குழுவினரான இந்த ஹேக்கர்கள் மும்பையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மற்றும் விநியோக நிலையங்களை குறி வைத்து நகரை இருளில் மூழ்கடித்துச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. மேலும் இந்த சர்வர்களில் உள்ள டேட்டாக்களை திருட முயற்சி நடந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதை அடுத்து இதே போன்ற தாக்குதல்களை நடத்தச் சீனா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவ்வகையில் தெலுங்கானாவில் உள்ள இரு மின் நிலையங்களைச் சீன ஹேக்கர்கள் குறி வைத்துள்ளனர். ஆனால் இத்தகைய சைபர் தாக்குதல்களை கண்டறியும் இந்திய கணினி அவசர நிலை பதில் குழு இதை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்துள்ளது.
இந்த 2 மின் நிலையங்களும் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சைபர் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.