பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி செய்தி வெளியிட்டு கொண்டிருந்த பிரபல பத்திரிகையாளர்கள் இருவர் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா… சீனாவை மட்டும் அச்சுறுத்திய இந்த பெயர் இப்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்திருக்கிறது.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீனர்களையும், அந்நாட்டு உணவுகளுக்கும் மற்ற நாடுகள் தடை விதித்து இருக்கின்றன.
இந் நிலையில், புகழ்பெற்ற சிட்டிசன் ஜெர்னலிஸ்ட் செய்தியாளர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை தங்களது அலுவலகத்துக்கு அனுப்பி கொண்டிருந்தவர்கள். டுவிட்டர், யுடியூபில் அவர்களின் வீடியோக்கள் பிரபலம்.
சென் குயிஷே மற்றும் பங்பிங் என்பவர்கள் தான் அவர்கள். உகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல், மக்கள் பாதிப்பு என பல முக்கிய தகவல்களை அறிந்து, அலுவலகத்துக்கு செய்திகளை அனுப்பியவர்கள்.
குயிஷே தொலைபேசி 20 மணி நேரமாக அனைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அவரது நண்பர்கள் அவரை கடைசியாக வியாழக்கிழமை இரவு 7 மணி வரை தொடர்பில் இருந்ததாக கூறி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் பங்கிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. முன்னதாக வீட்டில் இருந்த போது , கதவை உடைத்து அதிரடியாக வந்த போலீசார் அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மாயமாகி இருப்பதாக பெரும் தலைவலியாக சீன அரசுக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.