லடாக்:

ந்திய சீன எல்லைப் போரில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 பேர் பலியானர்கள். இதில் வீரமரணம் அடைந்த ஒரு வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு இந்திய சீன எல்லையான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனாவுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில்,  இந்திய ராணுவ கர்னல் உள்பட  மூன்று பேர்  வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ஒருவர்  ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய வீரர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, இந்தியா ராணுவ வீரர்கள் அதிரடியாக பதிலடி கொடுத்ததாகவும்,  அதில சீன ராணுவ வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் சில சீன இராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து உடனடியாக முப்படை தளபதிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றார்.

கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் த்சோ ஆகிய பகுதிகளில் இந்திய எல்லையில் சீன துருப்புகள் கணிசமான எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக ஒரு தலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த தமிழக வீரர் பெயர்  பழனி (வயது 40) ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த என்றுவம், அவர்  கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.