பீஜிங்,

சீனாவில் உள்ள பழம்பெரும் பல்கலைக்கழகம் ஒன்றின் 115வது பட்டமளிப்பின்போது, அங்கு பயின்ற 115 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். இந்த ருசிகர நிகழ்ச்சி உலக மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

சீனாவில் உள்ள பழம்பெரும் பல்கலைகழகம் நாஞ்சிங் யுனிவர்சிட்டி ஆப் சைனிஸ் மெடிசின். இந்த பல்கலைக்கழகத்தின் 115வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதையொட்டி இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவ மாணவிகள் தங்களுடைய காதலர்களுடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த திருமண விழாவை பல்கலைக்கழக பட்டமளிப்பின்போது வித்தியாசமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்  நாஞ்சிங் பல்கலைகழகத்தின்  115வது ஆண்டுவிழா அன்று  இதே பல்கலையில் படித்த 115 ஜோடிகள் ஒரே இடத்தில் கூடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண ஜோடிகளில் ஏற்கனவே படித்து முடித்த பழைய மாணவர்கள் ஜோடி 57, அலுவலக நிர்வாகிகள் ஜோடி 6 மற்றும் தற்போது பட்டம் பெறும்  52 ஜோடிகள் இந்த திருணத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்காக வந்திருந்த மணமக்கள் அனைவரும்  ஒரே வெள்ளை நிற உடை அணிந்து ஒரே நேரத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி  கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த வித்தியாசமான திருமண செலவுகள் முழுவதும் பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.

1902ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சீனாவின் பழம்பெரும் பல்கலையில் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தில் சீனாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.