பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய சுற்றுலா ஏஜென்சியான சிட்ரிப்(Ctrip), தனது விளம்பரங்களிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் என்று இடம்பெறும் அம்சங்களை நீக்கியுள்ளது.
சீன நெட்டிசன்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்த ஏஜென்சி.
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் என்று அழைக்கப்படும் மாநிலம், சீனாவிலோ திபெத்தின் தென்பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனா இதுவரை ஏற்கவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தை பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சீனாவிலேயே பெரிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா ஏஜென்சி, தனது விளம்பரத்தில் அருணாச்சலப் பிரதேசம் என்று குறிப்பிட்டதானது, அந்நாட்டில் எதிர்ப்பைக் கிளப்பியதால், அந்த அம்சங்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.