இந்தியக் கடல் எல்லைக்குள், தமிழக கடற்பகுதியில் இன்று காலை சீனக் கப்பல் ஒன்று நுழைய முயன்றது. அதை இந்தியக் கடலோரக் காவல் படையினர் விரட்டி அடித்தனர். தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்திருக்கிறது.
அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று இன்று காலை, திடீரென இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. தமிழக கடலோர எல்லையில் இந்த அத்துமீறல் நடந்தது.
உடனடியாக இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி சீனக்கப்பலை விரட்டியடித்தனர். இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதையும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் வெளியிடவில்லை.
இந்த நிலையில் இது குறித்து இலங்கை விளக்கமளித்திருக்கிறது.
“அந்தக் கப்பல் பழுதடைந்துள்ளது. கொழும்பிலிருந்து கன்னியாகுமரி வழியாக கோவாவுக்கு பழுது பார்க்கவே சென்றது. இந்தியக் கடற்படையினரின் சமிக்ஞைக்கு சரியான முறையில் அந்த கப்பலில் இருந்து பதில் வரவில்லை, இதையடுத்து எச்சரித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இந்திய படையினர் அக் கப்பலை விரட்டினர்” எனறு இலங்கை தெரிவித்துள்ளது.