சீனா: 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்,

பெய்ஜிங்கில் உள்ள பல மருத்துவ நிறுவனகளை நேரில் பார்வையிட்ட பின்னர் பேசிய ஜி, தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற கடுமையான முயற்சிகள் தேவை என்றும், அந்த பிரச்சாரத்திற்கு சீனா தொழில்நுட்ப உதவியை வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

உயிர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும், சாத்தியமான தடுப்புப் பணிகளுக்குத் தயாராவதற்கு சீனா தேசிய தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரார்த்தனை நடத்தப்பட்ட சர்ச்சில் கொரோனா சோதனை

வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை குணப்படுத்தும் வீதத்தை திறம்பட மேம்படுத்துவதற்கும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சை பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜி மேலும் கூறினார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆயிரம் வரை மெதுவாக உயர்ந்த பலியின் எண்ணிக்கை தற்போது நாளுக்குநாள் சராசரியாக 100-க்கும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,345 பேர் உயிரை குடித்திருந்தது.

“மாமிச விலங்குகளை உண்ணும் கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நாகரிகமான, ஆரோக்கியமான, பசுமையான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.