பீஜிங்:
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அடுத்த வாரத்தில், சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.
தென் சீன கடல் பகுதியில் பெரும்பான்மையான பரப்பு, தன்னுடையது என்று சீனா சீனா உரிமை கோருகிறது. இதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபை நடுவர் தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளளது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே தனது ராணுவ பயிற்சிகளை முடித்துவிட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த கடற்பகுதியில் உள்ள பாராசெல் தீவுகளை தைவானும், வியாட்நாமும் உரிமை கொண்டாடுகின்றன.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனா ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருப்பது இப்போதே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள், சீனாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்கள்.
Patrikai.com official YouTube Channel
