நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.
வுஹான் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் இன்னும் 10 ஆண்டுகளில் ஆய்வுக்காக நிலவில் தங்குவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான முயற்சிகளை செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இதற்கு தேவையான மண்ணை நிலவில் இருந்து எடுத்து வந்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் பூமிக்கு அருகாமையில் உள்ள நிலவின் மேற்பரப்பில் இருந்து மண் முதலியவை ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.
பூமியில் இருந்து தொலைவில் இருக்கும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தங்களின் இந்த முயற்சி 2028 ம் ஆண்டு ஒரு முக்கிய கட்டத்தை எட்டும் என்று தெரிவித்துள்ளனர்.
100 க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணைக் கொண்டு செங்கல் செய்யும் முயற்சி வெற்றியடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்னும் 10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் தங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.