பெய்ஜிங்:
மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு சிறப்பு தூதரை அனுப்ப முடிவு செய்தார். இந்த பட்டியலில் இந்தியா பெயர் இல்லை என்ற தகவல் வெளியானது. இதற்கு மாலீத்தீவு அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் சீன அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘‘மாலத்தீவு மற்றொரு மோதல் தளமாக்க மாலத்தீவு அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியாவுடன் தொடர்பில் உள்ளோம். மாலத்தீவு விவகாரத்தில் 3ம் தரப்பு தலையீடு என்பதற்கு இடமில்லை’’என்று தெரிவித்துள்ளது.
டோக்லாமில் இந்திய-&சீன ராணுவம் இடையே மோதல் உருவானது. பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு ஐ.நா.வில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது போன்றவற்றால் இந்தியா&சீனா இடையே மோதல் போக்கு நிலவியது. அதனால் தான் மாலத்தீவு மற்றொரு மோதல் தளமாக்க வேண்டாம் என்று சீனா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.