பெய்ஜிங்: அணுசக்தியால் இயங்கவல்ல கப்பல்களைக் கட்டுவதற்கு, ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது சீன அரசு நிறுவனமான சீன பொது அணுசக்தி குழுமம்.
தற்போது ரஷ்யா வைத்திருக்கும் பனி உடைக்கும் அணுசக்தி கப்பல்களை ஒத்த தொழில்நுட்பம் கொண்டாத இவை இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
30,000 டன் எடைக்கொண்டதாக கட்டப்பட திட்டமிடப்படும் இந்தக் கப்பல், ஒரு சோதனை முயற்சிக்கான தளம் என்பதாக ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிடம், தற்போது வரை இதுபோன்ற கப்பல் இல்லை. உலகிலேயே ரஷ்யா மட்டுமே, இத்தகைய அணுசக்தியால் இயங்கும் பனிஉடைப்பு கப்பல்களை வைத்துள்ளது.
ஆனால், சீனாவும் வரும் நாட்களில் அத்தகைய கப்பல்களைப் பெறுவதன் மூலம், அதன் ஆதிக்கம் ஆர்க்டிக் பிராந்தியத்திலும் பரவ வாய்ப்புள்ளது.
அணுசக்தியால் இயங்கும் கப்பலுக்கும், அதே சக்தியால் இயங்கும் விமானத்திற்குமான தொழில்நுட்பங்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளதால், பிற்காலத்தில், அணுசக்தியால் இயங்கும் விமானங்களை தயாரிப்பதும் எளிதாகும் என்று கருதப்படுகிறது.
– மதுரை மாயாண்டி