வாஷிங்டன்

திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது சீனாவுக்கு அதிர்ச்சிய உண்டாக்கி இருக்கிறது.

திபெத் பிரதமர்

கடந்த 1959 ஆம் வருடம் சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது.  இதையொட்டி 14 ஆம் தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறினார்.  அவரது தலைமையில் திபெத்தியர்கள் மைய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது.   கடந்த 1959 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இந்த திபெத்தியர்கள் மைய நிர்வாக நாடாளுமன்றம் இந்தியாவில் நிறுவப்பட்டது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இது குறித்து அமெரிக்கா திபெத் அரசுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் இருந்தது.  இதனால் இதுவரை திபெத்தில் இருந்து யாரும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படவில்லை.  இந்நிலையில் முதல் முறையாக திபெத் பிரதமர் லோப்சாங் சங்கேவுக்கு அமெரிக்க அரசு வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுத்தது.

இது உலக அளவில் குறிப்பாகச் சீன அரசுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.  வெள்ளை மாளிகையில் திபெத் பிரதமர் லோப்சாங் சங்கே வருகை தந்து நடத்திய பேச்சு வார்த்தையின் போது அமெரிக்க அரசு திபெத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவல் சீன அரசுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.