1600க்கும் மேற்பட்ட ஆண்களை பாலியல் வலையில் சிக்கவைத்து சீரழித்த ‘சிஸ்டர் ஹாங்’ விவகாரம் சீனாவையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நான்ஜிங் நகரில் நடைபெற்ற இந்த பாலியல் வேட்டையில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து எய்ட்ஸ் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் அங்கு நிரந்தர முகாம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களுக்கு வலைவீசிய ‘சிஸ்டர் ஹாங்’ தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் பிற ஆண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், அதற்காக பணம் கூட தரத்தேவையில்லை என்று கூறிய ‘சிஸ்டர் ஹாங்’ வேண்டுமானால் தனது வீட்டிற்குக் கூட வரலாம் என்று வீடியோ கால் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று வெறுங்கையுடன் செல்ல மனமில்லாமல் பால் பாக்கெட், கடலை உருண்டை, மளிகை சாமான் என்று கிடைத்ததை கையில் பிடித்துக்கொண்டு அங்கு சென்ற ஆண்கள் தான் தற்போது திகிலில் உள்ளனர்.
தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த ஆண்களை அவர்களுக்குத் தெரியாமல் நிர்வாணமாக வீடியோ எடுத்த ‘சிஸ்டர் ஹாங்’ அதை ரகசியமாக டெலிகிராம், வெய்போ, டிக்டோக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கசிய விட்டிருக்கிறார்.
இந்தக் காட்சிகளை சமூக வலைதளத்தில் பார்த்த ஒரு சில ஆண்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து அவர்களிடம் தெரிவிக்க பதறிப்போன அவர்கள் ஆண்டி என நம்பி சீரழிந்த கதையை கூறியுள்ளனர்.
தங்களை உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்த ‘சிஸ்டர் ஹாங்’ உண்மையில் ஒரு பெண்ணில்லை என்பது தங்களுக்கு அங்கு சென்ற பிறகுதான் தெரியவந்ததாக கூறிய அவர்கள் அது ஒரு ஆண் என்பதை கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் நான்ஜிங் நகரில் உள்ள பார்கள் கிளப்புகள் மட்டுமன்றி வீதியில் போவோர் வருவோர் எல்லாம் பேசுமளவுக்கு வந்ததை அடுத்து ‘சிஸ்டர் ஹாங்’கை நம்பி மோசம்போனதாக தெருவுக்கு ஒருவர் என்ற ரேஞ்சுக்கு கிளம்பி வந்துள்ளனர்.
இதனால் சுதாரித்த காவல்துறை ‘சிஸ்டர் ஹாங்’ என்று கூறி மோசடியில் ஈடுபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் TikTokக்கில் பிரபலமான “ரெட் அங்கிள்” என்பதும் மலிவான விக் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை வைத்துக் கொண்டு தன்னை அழகாகக் காட்டக்கூடிய கேமரா பில்டர்களை பயன்படுத்தி இத்தனை ஆண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும், தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த ஆண்களை நிர்வாணமாக படம்பிடித்து அதனை சில ஆபாச தளங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ததாகவும் கூறியதோடு இதுவரை சுமார் 1692 பேரை இப்படி ஏமாற்றியதாக கணக்கும் வைத்திருக்கிறார்.
இதையடுத்து, இத்தனை ஆண்களுடனா ? என்று மலைத்த காவல்துறையினர் இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவலளித்ததை அடுத்து நகர் முழுவதும் சுகாதார பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்கள் சோதனையில் மூன்று பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளதை அடுத்து நான்ஜிங் ‘சிஸ்டர் ஹாங்’ விவகாரம் தற்போது சீனா முழுவதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.