பீஜிங்: 133 பேருடன் சென்ற போயிங் 737 சீன விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணிகள், விமானிகள் மற்றும் ஊழியர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானே போயிங் 737 விமானம் ஒன்பது பணியாளர்களுடன் 139 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது சம்பவத்தின்போதுரு, பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தது, அப்போது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரங்களுக்கு இடையே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. மரங்களுக்கு இடையில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதால் நாட்டின் மலைகளில் விழுந்து நொறுங்கியது என உறுதி செய்யப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்தவர்களின் பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
“தற்போது, மீட்புக் குழுக்கள்நெருங்கிவிட்டன என்றும், அவர்கள் அங்கு சென்றபிறகே விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்து தெரிய வரும்.