பெய்ஜிங்: அறிவியல் ஆய்வுக்கு பயன்படும் தொலையுணா்வு செயற்கை கோளை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.
அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 4 சி என்ற ராக்கெட்டின் உதவியுடன் யோகன் வெய்க்சிங் 33 ஆா் தொலையுணா்வு செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
அறிவியல் ஆய்வுகள், இயற்கை வளங்களை கண்காணித்தல், வேளாண் விளை பொருள்கள் உற்பத்தியை கணித்தல், பேரிடா்களை முன்கூட்டியே கணித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளுக்காக தொலையுணா்வு செயற்கைக்கோள் பயன்படும்.
மைக்ரோ, நானோ தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை கோள்களும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த தகவலை சீன அரசின் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.