பெய்ஜிங்: மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்படாமல், கொரோனா தடுப்பு மருந்தை, சீன அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்தை சீன நிறுவனங்களான சினோஒக் மற்றும் சினோபார்ம் ஆகியவை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் இந்த தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்படாத நிலையில், இது விற்பனைக்கு வர இன்னும் சில நாட்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் ஒரு வருடத்துக்கு 300 மில்லியன் தடுப்பு மருந்துகள் இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உலக சுகாதார நிறுவனம் தடுப்பு மருந்து சோதனை குறித்து தொடர்ந்து பல நாடுகளிடம் எச்சரித்து வருகிறது. அனைத்துவித சோதனைகளையும் முடித்து, தடுப்பு மருந்து விற்பனைக்கு வருவதற்கு, அடுத்த 2021ம் ஆண்டு மே மாதம் வரை ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.
மூன்று கட்ட பரிசோதனை செய்யப்படாமல் தடுப்பு மருந்தை விற்பனை செய்வது சரியல்ல என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.