புதுடெல்லி: இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினை இன்னும் தீராத நிலையில், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது சீனா.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மேற்கண்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவுக்கு நேபாளம் மற்றும் பாகிஸ்தானுடனும் எல்லைப் பிரச்சினை உண்டென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான், பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது சீனா. பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு 4 நாடுகளும் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளுதல், கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் இந்தியாவை பதற்றமடையச் செய்யும் நோக்கத்திற்காகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.