பெய்ஜிங்:
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் பரவிப் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர் மரணங்கள் நிகழ்ந்தது. கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும், கொரோனாவின் பரவல் கட்டுக்குள் நிற்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் கொரோனா பல காலங்கள் தொடரும் என்றும் எச்சரித்தது. மேலும் ஊரடங்கு மட்டுமே தீர்வு என்றும் முடிந்தவரை வீட்டிலே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கினாலும், சீனா அரசு தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.