ஷாங்காய்

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங். ஷாங்காய் நகரில் வசித்து வந்தார்.  சுமார் 68 வயதாகும் இவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இவர் சீனாவின் பிரதமராக இருந்தார்.

லீ கெகியாங் சீனாவின் தலைமைப் பொருளாதார அதிகாரியாக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு 1955-ம் ஆண்டு அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக அரசியலில் நுழைந்தார்.

லீ கெகியாங் சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1994-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.