டெல்லி: இந்தியா சீனா இடையே மீண்டும் நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், சீன்வின் வணிக நகரமான  ஷாங்காய்  – இந்திய தலைநகர் டெல்லி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக  சீன விமான  நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஷாங்காய், சீனாவின் கிழக்கு கடற்கரையில் யாங்சே ஆற்றின் முகப்பில் அமைந்துள்ள, மக்கள்தொகை அதிகமுள்ள நகரமாகும். இது சீனாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று மற்றும் முக்கிய நிதி மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. இது நவீன கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய சீன கலாச்சாரத்தின் கலவையாக இருப்பதால், உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த விமான சேவை  நவம்பர் 9 முதல்  வாரத்திற்கு மூன்று நாள் இயக்கப்பட உள்ளதாகவும்,  ஷாங்காய் மற்றும் டெல்லி இடையே ர்பஸ் A330-200 விமானத்தை நேரடி விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக,   சீனாவின்  ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது,  இந்த பயணிகள் விமானம், வாரத்தின் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இயக்குவதாக அறிவித்து உள்ளது.

 கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனா மற்றும் இந்தியா இடையிலான நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழல்களைத் தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, இந்தியா மற்றும் சீனா இடையில் அக்டோபர் மாதம் இறுதியில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து,  சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள், வரும் அக்.9 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன.  அதைத்தொடர்ந்து,  மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரத்துக்கும் சீனாவின் குவாங்சோவுக்கும் இடையில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.