பீஜிங்

ந்திய விமானப்படை தாக்குதல் குறித்து இந்தியா பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மேலும் தாக்குதல் நடத்த உள்ளதாக வந்த தகவலை ஒட்டி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் ஈ முகமது இயக்க முகாம்களை அழித்தது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரக செய்தி தொடர்பாளர் லூ காங், “நாங்கள் இது குறித்த சரியான தகவல்களை சேகரித்துள்ளோம். நான் இந்தியாவும் பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கிய நாடுகள் என்பதை அறிவேன். இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவும் ஒற்றுமையும் தேவை.

இதன் மூலம் தெற்கு ஆசியாவில் அமைதியும் ஸ்திரத் தன்மையும் நிலவும். மேலும் பாகிஸ்தானும் இந்தியாவும் பொறுமையாக நடந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் உள்ள நல்லுறவு மேம்படும். அதனால் தெற்கு ஆசியாவில் அமைதி நிலவும்” என தெரிவித்துள்ளார்.