வுஹான்:
சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அரசு நடத்தும் டிவியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்தே சரியான நேரத்தில் அறிக்கை அளிக்கப்படவில்லை. இதனாலேயே அந்த அறிக்கையில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், வுஹான் நகரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 50 ஆயிரத்து 333 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எண்ணிக்கையில் 325 உயிரிழப்புகள் தற்போது சேர்கப்பட்டு, திருத்தப்பட்ட அறிக்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 869 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நேரத்தில், நோயாளிகளில் சிலர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெறமால் வீட்டிலேயெ இருந்ந்துள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால், அவர்கள் வீட்டிலேயே உயிரிழந்து விட்டனர். இவர்களது இறப்புகள் கொரோனா உயிரிழப்பு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உச்சத்தை தொட்ட நிலையில், சீனாவில் இருநத மருத்துவமனைகளில் அதிகளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருந்தனர். இருந்தபோதிலும், வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகள், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறமால் இருந்ததாலும், அவர்களது நோய் குறித்த அறிக்கைகள் தாமதமாக பெறப்பட்டதாலும் அவர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அந்த எண்ணிக்கையில் சீனா திருத்தம் செய்துள்ளது. இந்த செயல் சீனா வெளியிடும் அறிக்கைகளின் துல்லியம் குறித்து சந்தேகத்தை உண்டாக்கி விட்டது.
இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகள் குறித்து சீனா வெளியிட்ட அதிகார்ப்பூரவ அறிக்கை துல்லியமற்றதா? என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று சீனா கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைவாக அறிவித்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், சீனாவின் வுஹானில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்ட புகைப்படங்கள்படங்கள் சீன சமூக வலைதளங்களில் பரவியது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது, கொரோனா வைரஸ் தோன்றிய நகரத்தில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தங்களது எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாக அறிக்கை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா, தங்களிடம் உள்ள தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளதாக என்று கூறியுள்ளது.
ஆனாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, சீனாவின் தொடர்ச்சியான தரவு திருத்தங்கள், பிப்ரவரியில் வேறுபட்ட மருத்துவ முறை மூலம் கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 15,000 உயிரிழப்புகள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பார்க்கும் போது, இந்த விவகாரத்தில் சீனாவின் மீது ஒருவித அவநம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.
தற்போது கொரோனா உயிரிழப்புகளில் சீனா மேற்கொண்ட திருத்தம் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையை அமெரிக்காவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 30,000-ஐ கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதே போல் இத்தாலி மற்றும் ஸ்பெயினில், கொரோனா உயிரிழப்புகள் 20,000-ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து சீனாவின் வுஹான் நகரிலேயே அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகின. இந்நிலையில் தற்போது வெளியனான கொரோனா உயிரிழப்பு அறிக்கையில் சீனா திருத்தம் செய்துள்ளதை அடுத்து, சீனாவில் நாடு தழுவிய இறப்பு எண்ணிக்கையை 4,636 ஆக அதிகரித்துள்ளது.