சம்பல்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாய நிலப்பகுதியில் சாலை அமைத்தது தொடர்பாக எழுந்த தகராறில், சமாஜ்வாதி கட்சியின் பிரமுகரும், அவரது மகனும் நில உரிமையாளர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சாம்சோய் கிராமம் உள்ளது. இங்கு பஞ்சாயத்து தலைவராக சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கணவர் லால் திவாகர் இருந்து வருகிறார். இவர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் அந்த பகுதி மக்களின் வசதிக்காக புதிய சாலையை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
சம்பவத்தன்று கணவர் லால் திவாகரும், அவரது மகன் சுனிலும், கிராமப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டு வந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேர் கையில் துப்பாக்கியுடன், அதைக்காட்டி அவர்களை மிரட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோரை சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த படுகொலை பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.