திருவனந்தபுரம்:

ழைக்காலங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை  ஷூ, சாக்ஸ் அணிய கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள மாநிலத்தை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு  கேரள குழந்தை கள் நல ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மழைக்காலங்களின் போது, பள்ளி மாணவர்கள் அணியும் ஷு, சாக்ஸ் போன்றவை நனைந்து விடுவதால், அதை அணிவதை பல பள்ளிகள் தவிர்த்து வரும் நிலையில், மத்தியஅரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில், மாணவர்கள் கட்டாயம் ஷு, சாக்ஸ் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது மேலும்,  மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் அணிவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும், நனைந்து ஷுவுடன் பள்ளி நேரம் முழுவதும் குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கு  உடல் நலக்குறைவும் ஏற்படுவதாகவும்,  எனவே மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ் அணிவதில் விலக்கு அளிக்கவேண்டும் என்றும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து விசாரணை செய்த கேரள குழந்தைகள் நல ஆணையம், மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள்  ஷு, சாக்ஸ் அணிவதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும்  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் நல ஆணைய தலைவர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.