டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மூத்த குடிமக்களில் பலர் தங்கள் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு,  தானப் பத்திரம் மூலம் சொத்துக்களை ஒப்படைத்தவுடன், அவர்களைத் தற்காத்துக்கொள்ளும் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பெற்றோர்கள் கையெழுத்திட்ட பத்திரங்களை ரத்து செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனால்,  வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்ய முடியும் என என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து  பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார்சஞ்சய் கரோல்  அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கருத்துதெரிவித்த நீதிமன்றம்,

இந்த வழக்கில்,  ம.பி. உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.

சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

வழக்கின் விசாரணையின்போது,2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்]  இரண்டு ஆவணங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய  உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  இதன்படி,  பிள்ளைகள்,  பெற்றோர்களைப் பராமரிப்பதற்கான நிபந்தனைக்கு உட்பட்டது என்பது குறித்த மாற்றுக்கருத்து இல்லாத நிலையில், சட்டத்தின் 23வது பிரிவின் பலனை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.  சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் நிவாரணம், வயதான குடிமக்கள் கவனிக்கப்படுவ தில்லை என்ற சட்டத்தின் பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்று பெஞ்ச் விளக்கியது.

“இது சட்டத்தின் நோக்கங்களை நேரடியாக மேம்படுத்துவதோடு, மூத்த குடிமக்கள் மாற்றும் நபரால் பராமரிக்கப்படும் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு சொத்தை மாற்றும்போது உடனடியாக அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது” என்று அது குறிப்பிட்டது.

இதன் விளைவாக, நீதிமன்றம், “எனவே, மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான நிபந்தனைகள் கடைபிடிக்கப்படாததால், பரிசுப் பத்திரத்தை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் கீழுள்ள தீர்ப்பாயங்கள் சரியாகக் கூறியுள்ளன. டிவிஷன் பெஞ்ச் எடுத்த கருத்துடன் எங்களால் உடன்பட முடியவில்லை, ஏனெனில் இது ஒரு நன்மை பயக்கும் சட்டத்தின் கடுமையான பார்வையை எடுக்கும். அதன்படி, மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அனுமதித்தது என்று தெளிவுபடுத்தியதுடன், பெற்றோர்களை கவனிக்காத குழந்தைகளுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட தானப்பத்திரங்களை ரத்து செய்ய அவர்களுக்கு உரிமை உண்டும் என்றும் தெரிவித்தது.