சென்னை: தமிழ்நாட்டில்,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுவரை ரூ.1 லட்சம் சிகிச்சை கட்டணமாக இருந்த நிலையில், தற்போது அதை   ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 1,20,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச்சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,   பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனர்கள்,  அரசு மருத்துவமனை மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியும்.

• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

• இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்த காப்பீட்டுத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1,00,000 வீதம், காப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ 1,50,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த காப்பீட்டுத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1,00,000 வீதம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.