சென்னை: தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு, நடைபெற்ற 23 நாட்கள் முதல் பட்ஜெட் கூட்டர் தொர் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி, அமைச்சர்களுடன் மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி அன்று தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 13ந்தேதி) முடிவடைந்தது. சுமார் 23 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். திமுகவின் தேர்தல் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.  சிஏஏ, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதையொட்டி சட்டப்பேரவையை தேதி  குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் பெருமக்களும் உடன் சென்றிருந்தனர்.